இயங்குநர் வெட்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான படம் இது என கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் , மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போதுவரும் என சிம்புவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில், மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது  டுவிட்டர் பக்கத்தில் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	அதில், எங்கள் மாநாடு படக்குழு ஒரு சிறந்த படத்தை உங்களிடம் கொண்டுவந்த கொடுக்க உழைத்து வருகிறது. அதனால் ஒவ்வொரு கட்டமாக இப்படத்தின் அப்டேர் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.