நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva
வியாழன், 2 அக்டோபர் 2025 (11:12 IST)
மும்பை உயர் நீதிமன்றம், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தாய்லாந்தில் உள்ள புகெட்டிற்கு மூன்று நாள் குடும்ப விடுமுறைக்கு செல்ல அவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
 
மேலும், மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவால்   பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
 
இந்த தம்பதியின் வழக்கறிஞர், "ராஜ் குந்த்ரா எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளார்" என்று தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் அன்காத் ஆகியோர் அடங்கிய அமர்விடம் வாதிட்டார். 
 
ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர், இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது" என்று உறுதியாக கூறியதால் நீதிமன்றம் ஷில்பாஷெட்டி, ராஜ் குந்த்ரா வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments