Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைத்தியமா இவ... கடைசியில் கண்டுபிடித்த இன்டிகோ விமான அதிகாரிகள்

Advertiesment
பைத்தியமா இவ... கடைசியில் கண்டுபிடித்த இன்டிகோ விமான அதிகாரிகள்
, சனி, 15 டிசம்பர் 2018 (14:12 IST)
மும்பை விமான நிலையத்தில் பெண் ஒருவர் குறிப்பிட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி நம்ப வைத்து வெடிகுண்டு நிபுணர் குழுவை அலைய விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை விமான நிலையத்தில் கோ ஏர் விமானம் டெல்லி புறப்பட காத்திருந்தது. அப்போத் அங்கு விரைந்த பெண் ஒருவர், ஒரு பெண் விமான நிலைய பணியாளரை அணுகி, மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் இன்டிகோ 6E 3612 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். 
 
அதோடு மேலும் சில புகைப்படங்களை காட்டி இவர்கள் ஆபத்தானவர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, அந்த விமான பெண் ஊழியர் உடனே விமான நிலைய போலீஸாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். 
 
பின்னர், அங்கு விரைந்து வந்த இன்டிகோ விமான வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வெடிகுண்டு சோதனையில் ஈடுப்பட்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. 
 
இதன் பின்னர் வெடிகுண்டு பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணை அழைத்து விசாரித்த போது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து கடுப்பாகினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு