Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த கட்சி போஸ்டரை கிழித்த பாஜகவினர்…

Advertiesment
BJP people tore down their own party poster
, வியாழன், 29 ஜூன் 2023 (19:14 IST)
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ ரிச்சர்ட் என்பவர், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டும் ஒரு போஸ்டரில் அடித்து ஒட்டியுள்ளார்.

இதைப் பார்த்த பாஜகவினர் இந்தப் போஸ்டரில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் படங்ள் இடம்பெறாததைக் கண்டித்து ஒட்டியிருந்த போஸ்டரை கிழித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, பாஜக நிர்வாகி ஒருவர், ‘’தங்கள் கட்சியில் இருந்து தேர்வு செய்து, ஓட்டுபோடவைத்து, அவரை ஜெயிக்க வைத்திருக்கிறோம். ஆனால், இப்போஸ்டரில் எந்தக் கட்சியையும் குறிப்பிடவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்கள் இடம்பெறாததால் இதைக் கிழிக்கிறோம். கட்சி மேலிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான்: ஜே.பி.நட்டா பேச்சு