தந்தி டிவி பேட்டியில் நீங்கள் இந்து மதம் இல்லை என்று சொன்னீர்கள் என்று அண்ணாமலைக்கு நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டியிருந்தார்.
அதில். ''இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு ரீடுவீட் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம்,'உங்களுக்கு வெட்கமாக இல்லையா' என்று சில கேள்விகளை அண்ணாமலையிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
1.திமுக நாத்திகம் பற்றி நீங்கள் புகார் செய்கிறீர்கள். ஆனால் தந்தி டிவி பேட்டியில் நீங்கள் இந்து மதம் இல்லை என்று சொன்னீர்கள்.
2. தீக்ஷிதர் பிரச்சனை, தீக்ஷிதர் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு ஓட முயற்சித்தீர்கள். ஆனால் ஜல்ட்ரா குழுவை திருப்திப்படுத்த மட்டுமே இப்போது வெட்கமின்றி ஒரு கடிதம் எழுதுவது வெட்கமாக இல்லையா?
3. முதல்வரின் மனைவி துர்கா அம்மாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினீர்கள்.
இது உன் வீரமா? கோழை. என்று தெரிவித்துள்ளார்.