Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் முதலில் திருமணம் செய்யட்டும்; ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது: பாஜக எம்பி சர்ச்சை!

Advertiesment
ராகுல் முதலில் திருமணம் செய்யட்டும்; ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது: பாஜக எம்பி சர்ச்சை!
, வெள்ளி, 27 ஜூலை 2018 (19:01 IST)
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பேசி முடித்த பின் ராகுல் மோடியை கட்டிப்பிடித்ததும் சர்ச்சையை கிளப்பியது.
 
இதற்கு உபி முதல்வர் யோகி, பிரதமரை கட்டிப்பிடித்தது போல் ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும் என்று கூறினார். 
 
ராகுலும் சமீபத்தில் இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி நிற்கிறார்கள். அவர்களை நான் கட்டிப்பிடித்து விடுவேன் என அவர்கள் பயப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
 
ஆனால் தற்போது ராகுல்காந்தி குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துக்கொண்டு பிறகு எங்களை கட்டிப்பிடிக்கலாம். ராகுல் காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவரது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை என இவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் நன்றாக இருக்கிறார் - மு.க.அழகிரி பேட்டி