Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமர் எங்களை ஆசீர்வதிப்பார்! – நீதிமன்ற தீர்ப்பால் பாஜகவினர் மகிழ்ச்சி!

Advertiesment
ராமர் எங்களை ஆசீர்வதிப்பார்! – நீதிமன்ற தீர்ப்பால் பாஜகவினர் மகிழ்ச்சி!
, புதன், 30 செப்டம்பர் 2020 (17:56 IST)
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக பிரமகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லை என்றும், மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே அத்வானி, மனோகர் ஜோஷி ஆகியோர் முயன்றார்கள் என்றும் கூறியுள்ள நீதிமன்றம் சம்பந்தப்பட்ட 32 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

நீண்ட ஆண்டுகள் நடைபெற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அத்வானி “ராமஜென்ம பூமி மூலமான என் சொந்த நம்பிக்கையும், கட்சியினரின் நம்பிக்கையையும் இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. ராமர் எங்களை ஆசீர்வாதமாக வைத்திருப்பார்” என கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் “நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட ஆண்டுகள் கழித்து நீதி வென்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தேசிய அளவில் உள்ள பல பாஜக பிரமுகர்கள் ஆதரவாக பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலைப்பருப்பு சாப்பிட்ட குழந்தை மூச்சு திணறிப் பலி !