உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு உத்தரவுகளை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல், இதை அவர் வெளியில் சொல்லாதிருக்க அந்த பெண்ணின் நாக்கை வெட்டியதோடு, கடுமையாக தாக்கி சாலையில் வீசி சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தேசிய அளவில் இந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத் 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.