Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”பாத்திரம் வேண்டாம், பட்டாக்கத்தி வாங்குங்கள்” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

Advertiesment
”பாத்திரம் வேண்டாம், பட்டாக்கத்தி வாங்குங்கள்”  பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

Arun Prasath

, திங்கள், 21 அக்டோபர் 2019 (16:10 IST)
தீபாவளி பண்டிகையின் போது, மக்கள் பாத்திரத்திற்கு பதில் பட்டாக்கத்தியை வாங்குங்கள் என பாஜக தலைவர் காஜ்ராஜ்ரானா சர்ச்சையாக பேசியுள்ளார்.

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்கு முந்திய நாட்களில், ”தாந்தேரஸ்” கொண்டாடப்படுகிறது. இந்த தாந்தேரஸ் இந்த வருடம் வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் தாந்தேரஸின் போது நகைகளும், வீட்டு உபயோக பாத்திரங்களும் வாங்குவது வழக்கம். இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம், பாஜக தலைவர் காஜ்ராஜ்ரானா, “மக்கள் இந்த முறை பாத்திரங்கள் வாங்குவதற்கு பதில், பட்டாக்கத்தியை வாங்குங்கள்” என கூறியுள்ளார்.

அதாவது, அயோத்தி வழக்கில், இந்துகளுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்பப்படுகிறது. ஒரு வேளை மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க பாத்திரங்களுக்கு பதில் பட்டாக்கத்தியை வாங்குங்கள்” என அறிவிறுத்தியுள்ளார்.

இவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இவர், காஜ்ராஜ்ரானா தான் எந்த ஒரு சமூகத்துக்கோ அல்லது மதத்துக்கோ எதிராக பேசவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். காஜ்ராஜ்ரானாவின் பேச்சு மத துவேஷத்தை தூண்டுவதாக பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன தப்பு செஞ்சே ? என்னை கைதி போல அழைத்து வந்தனர் - வசந்தகுமார் எம்.பி., வேதனை!