பீகார் மாநில துணை முதல்வருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பல விஐபிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதனை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் சுஷில்குமார் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது