ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ராணுவ மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். குழந்தை பிறக்க இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதால் அவர் தைரியமாக பயணம் செய்ததாக தெரிகிறது
ஆனால் ரயில் கிளம்பிய ஒரு சில மணி நேரத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடிக்க ஆரம்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ராணுவ மருத்துவர்கள் இருவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு கூடிய டுவிட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் லைக்ஸ்கலும் குவிந்து வருவதோடு இராணுவத்தின் மீதான மரியாதை மேலும் அதிகரித்துள்ளதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்