நிர்பய வழக்கு ” குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு !
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. தீர்ப்பு கூறப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தண்டனையை நிறைவேற்றாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
மாறி மாறி சீராய்வு மனுக்கள் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்து கொண்டே இருப்பதால்தான் இந்த கால தாமதம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே குற்றவாளிகளின் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிபதி, நீங்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என தெரிவித்திருந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி 4 பேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்க கோரி, வினய், பவன், அக்சய், ஆகிய 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த 4 பேரில் 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால், வரும் 20 ஆம் தேதி 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா இல்லை மேலும் காலதாமதம் ஆகுமா என பலரும் இவர்களின் தண்டனை குறித்து ஊடகங்கள் விவாதித்து வருகின்றன.