Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரான் மதகுரு கொரோனாவால் மரணம் : சோகத்தில் மக்கள்!

Advertiesment
World
, திங்கள், 16 மார்ச் 2020 (16:09 IST)
ஈரானில் பரவியுள்ள கொரோனா வைரஸால் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முக்கியமாக ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிர்பலியை சந்தித்துள்ளன.

ஈரானில் 13,938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 724 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களில் ஈரான் மதகுரு ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

ஈரான் சட்டமன்ற நிபுணர் குழுவின் உறுப்பினராக பதவி வகித்த அயதுல்லா ஹஷேம் பதாய், ஈரானின் உச்ச தலைவரை தீர்மானிக்கும் உயர் மதக்குருக்களில் ஒருவர் ஆவார். அவரது இறப்பு ஈரானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை : சட்டதிருத்த மசோதா தாக்கல் !