மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Prasanth K
ஞாயிறு, 15 ஜூன் 2025 (19:17 IST)

மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் திடீர் விபத்து சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்திரயானி ஆற்றில் வெள்ளம் நிரம்பி வழியும் நிலையில் அதை காண ஏராளமானோர் பாலத்தில் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 10 முதல் 15 பேர் வரை ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments