Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (17:27 IST)
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இஸ்ரேலை "நீண்ட காலமாகவே ஒரு ரவுடி நாடு" என்று வர்ணித்துள்ளார். உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த தன்னிச்சையான செயலை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
 
"அமெரிக்காவின் ஆதரவுடன் எதையும் சாதிக்கலாம் என்று இஸ்ரேல் கருதுகிறது. இது உலக நாடுகளின் அமைதிக்கு ஆபத்தான முன்னுதாரணம்.  இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஒரு நியாயமற்ற செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் நோக்கில், அதன் அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் அதிகாலை வான்வழித் தாக்குதலை தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது.
 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களில், ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் 3 பேரும் உயிரிழந்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments