Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா மர்ம நோய்; நோயாளிகள் உடலில் வேதிப்பொருட்கள்! – மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:10 IST)
ஆந்திராவில் மர்மமான நோய் பரவி வரும் நிலையில் நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளன.

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் மக்கள் மர்மமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதுடன் திகில் ஏற்படுத்தும் விதமாக அலறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் எதனால் பரவுகிறது என்பது புரியாமல் மருத்துவர்கள் குழம்பியுள்ள நிலையில் இந்த மர்ம நோயால் ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை 482 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் நோயாளிகள் உடலில் நிக்கல், காரீயம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வேதிப்பொருட்கள் எவ்வாறு நோயாளிகள் உடலுக்குள் சென்றன என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனுதாக்கல்..!

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments