Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பாய்ந்த கார்; குழந்தையை தூக்கி வீசி காப்பாற்றிய நபர் – வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (17:04 IST)
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் விழுந்து மூழ்கிய காருக்குள்ளிருந்து குழந்தையை எடுத்து கரையில் வீசி காப்பாற்றிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா என்னும் பகுதியில் ஒரு பாலத்தில் பல நபர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு ஜீப் வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிரே ஆட்டோ வரவு அதன் மேல் மோதிவிடாமல் இருக்க டிரைவர் ஜீப்பை வளைக்க அது தவறி ஆற்றில் அப்படியே கவிழ்ந்தது.

ஜீப் மூழ்க தொடங்கியதும் உள்ளிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் ஜீப்பினுள் மூழ்கி கொண்டிருந்த குழந்தை ஒன்றை வெளியே தூக்கினார். பாலத்தில் மக்கள் நின்று கொண்டிருந்த பக்கமாக உடனடியாக குழந்தையை தூக்கி வீசினார். ஆனால் குழந்தை மீண்டும் தவறி தண்ணீரில் விழுந்தது. அதற்குள் அருகிலிருந்தவர்கள் குதித்து குழந்தையை மீட்டனர்.

மேலும் சிலர் ஜீப் மூழ்கிய இடத்திற்கு நீந்தி சென்று அங்குள்ளவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தனர். விபத்து நிகழ்ந்ததும் உடனே சுற்றியிருந்த பொதுமக்கள் உதவியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments