Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 கிராம் தங்க நகையை தவிடு போல் முழுங்கிய மாடு

Advertiesment
40 கிராம் தங்க நகையை தவிடு போல் முழுங்கிய மாடு

Arun Prasath

, வியாழன், 31 அக்டோபர் 2019 (13:04 IST)
ஹரியானாவில் 40 கிராம் தங்க நகையை ஒரு காளை மாடு தீவனம் போல் முழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், சிர்சாவில் கலானாவாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜனகராஜ். ஒரு நாள் இவரது மனைவியின் நகைகளை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி காய்கறியை நறுக்கும்போது வந்த கழிவுகளை தவறுதலாக அந்த கிண்ணத்தில் சேமித்துள்ளார். பின்பு அந்த கழிவுகளை குப்பையில் கொட்டும்போது அந்த நகையையும் சேர்த்து கொட்டியுள்ளார்கள்.

அதன் பின்பு வீட்டில் நகை எங்கே என தேடியபோது தான் அவர்களுக்கு கழிவுகளோடு சேர்த்து நகையையும் கொட்டிய நியாபகம் வந்துள்ளது. பின்பு குப்பையில் தேடிய போது அந்த நகையை காணவில்லை. எனவே அந்த வீட்டிற்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, ஒரு காளை மாடு அந்த நகையை முழுங்கியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மாடை தேடி கண்டுபிடித்து இழுத்து வந்து தற்போது பராமரித்து உணவு கொடுத்து வருகின்றனர். மேலும் சாணத்தில் எப்படியாவது அந்த நகை வந்துவிடும் என அந்த குடும்பத்தினர் காத்துக்கிடக்கின்றனராம். அந்த தங்க நகை 40 கிராம் எடையுள்ள தங்க நகை என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுகிறது திமுக பொதுக்குழு; ஆட்சிமாற்றம் குறித்து ஆலோசனை?