Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமித்ஷா, மோடி, ராம்நாத் கோவிந்த்: ஒரே அந்தஸ்தா?

அமித்ஷா, மோடி, ராம்நாத் கோவிந்த்: ஒரே அந்தஸ்தா?
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (20:19 IST)
பாஜகவின் முக்கிய தலைவரான அமித்ஷாவிற்கு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கபப்ட்டுள்ளதாம். 
 
2019 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால் தேசிய கட்சிகள் இப்போதே தீவிரமாக தேர்தலுக்கான வியூகங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாஜக சார்பில் அமித்ஷா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களின் நிலையை அறிந்து வருகிறார். 
 
அதேபோல் பாஜகவின் சாதனைகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும் தேவையான செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகிறார். இதனால், அவருக்கு பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இருப்பதாக தெரிகிறது. 
 
ஏற்கனவே, அவருக்கு 2014 ஆம் ஆண்டு முதல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது, ஏஎஸ்எல் எனப்படும் நவீன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
ஏஎஸ்எல் பாதுகாப்பு அமித்ஷாவை தவிர குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஏஎஸ்எல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சலசலப்பில் தமிழக காவல்: முதல்வர் பாதுகாப்பில் குறை; போலீஸாருக்கு மெமோ