Publish Date: Wed, 26 Sep 2018 (06:59 IST)
Updated Date: Wed, 26 Sep 2018 (07:01 IST)
கடந்த சில மாதங்களாக அம்மா கட்சியை குறி வைத்து ஒருசில ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக சூரிய கட்சியை குறி வைக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.
சூரிய கட்சியின் தலைமைக்கு மிக வேண்டியவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருசில சினிமா பிரபலங்கள் இருப்பதாகவும், வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று பயமுறுத்தவே இந்த ரெய்டு அஸ்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனால் சூரிய கட்சியின் முக்கிய தலைகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதைவிட எத்தனையோ சோதனைகளை சந்தித்த சூரிய கட்சி இதையும் சமாளிக்கும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.