Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதால் நோயாளி பலி.. அதிர்ச்சி சம்பவம்..

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (13:59 IST)
மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென வெடித்து சிதறியதால் அந்த ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியான சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை - புனே விரைவு சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் 74 வயதான நோயாளி இருந்ததாகவும் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஏழு பேர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக தான் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்பானத்தில் விஷம்.. மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள்.. 3 பேர் கைது..!

பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments