Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு மருத்துவனையில் 24 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை

அரசு மருத்துவனையில்  24 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை
, புதன், 4 அக்டோபர் 2023 (17:48 IST)
மகாராஷ்டிராவின் நந்தெத் பகுதியில் உள்ள அரசு மருத்துவனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.
 
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் முறையான மருத்துவம் கிடைக்க அரசு கடமைப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, வரும் 6ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் டாக்டர் சங்கர் ராவ் ஜவான் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் இந்த மருத்துவமனையில்  24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் 12 பேர் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் தரமற்ற உணவுகள் அழிப்பு, ரூ.10.27 லட்சம் அபராதம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்