Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

Advertiesment
Allowance
, திங்கள், 30 மே 2022 (15:45 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு பிஎ.எம்.கேர் திட்டத்தின் கீழ் உதவி வழங்க்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

அதில், பிள்ளைகளின் அன்றாத் தேவைகளுக்கு என்று மாதம் தோறும் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும். 18 வயது முதல், 23 வயது வரை  உள்ள பிள்ளைகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.

பிள்ளைகளுக்கு 23 வயது நிறைவடையும்போது,  ரூ.10 லட்சம் வழங்கப்படும், ஆயுஸ்மான் மருத்துவ அட்டை பெற்றுள்ள குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எத்தகைய உதவியும் முயற்சியும் பெற்றோரின் அன்புக்கு ஈடாகாது என்றும், பெற்றோரரில்லாப் பிள்ளைகளுக்குப் பாரதத்தாய் துணையிருக்கிறார் என தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரமும் நூடுல்ஸ்தான் சாப்பாடு! – விரக்தியில் கணவன் எடுத்த முடிவு!