Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடித் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு !

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (20:43 IST)
பிரதமர் மோடித் தலைமையில் ஜூன் 15 ஆம் தேதி நடக்க இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த முறை மோடி முதல்முறையாக ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி மத்திய திட்ட கமிஷன் என்று இருந்த அமைப்பை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய உயரதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டாம் முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டத்தை கூட்டவுள்ளார். இதில் கலந்துகொள்ள மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு அனுப்பும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் இருந்து செய்த்கிகள் வெளியாகியுள்ளன.

நீர் நிர்வாகம், விவசாயம் மற்றும் நக்ஸலைட் தாக்குதல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கபடும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments