Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெகன் ரெட்டியின் அடுத்த கட்ட பாய்ச்சல்: ஆஷா ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”

ஜெகன் ரெட்டியின் அடுத்த கட்ட பாய்ச்சல்: ஆஷா ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”
, செவ்வாய், 4 ஜூன் 2019 (12:35 IST)
’சுகாதார துறையில் பணியாற்றுகின்ற ஆஷா ஊழியர்களுக்கு 7000 ரூபாய் சம்பள உயர்வு” என அறிவுத்துள்ளார் ஆந்திராவின் புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திராவில்  நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.அந்த தேர்தலில் ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களை வென்றது.அதன் வெற்றியை தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக அவர் பதவி ஏற்றார்.
 
அவர் பதவி ஏற்ற அன்றே ஆந்திர மாநிலத்தில் மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவரவேண்டும் என்று அறிவித்தது பெரும் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெற்றது.
 
இப்போது அடுத்த கட்ட பாய்ச்சலாக சுகாதார துறையில் பணியாற்றுகின்ற ஆஷா ஊழியர்களுக்கு 7000 ரூபாய் சம்பள உயர்வு” என அறிவுத்துள்ளது அத்துறை ஊழியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த சம்பள உயர்வால் ஆஷா ஊழியர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சுகாதார துறை குறித்து ஆய்வு செய்து வருகிற ஜெகன் தலைமையிலான  மாநில அரசு 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவரு சிந்தனை சிற்பி.. சைனடு குப்பி.. காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா!