மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் திடீரென இன்று சிவசேனா பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தார் என்பதும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் அவர் கவர்னரை சந்தித்தார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் சிவசேனா பாஜக அரசியல் இணைந்து துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்று கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் மகாராஷ்டிரா மாநில அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அஜித் பவர் ஆதரவாளர்கள் எட்டு பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் இந்த நடவடிக்கை பெருமாள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது