கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்! - உதயநிதி

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்! - உதயநிதி

Advertiesment
thiruvarur- kalaignar
, செவ்வாய், 20 ஜூன் 2023 (21:31 IST)
‘திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும் ‘என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை  திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருகை தர உள்ளார் என்று செய்திகள் நிலையான நிலைகள் உடல்நல குறைவு  காரணமாக திடீரென அவர் தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின்,  பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி முன்னிலையில், இன்று   திட்டமிட்டபடி கலைஞர் கோட்டத்தை திறந்துவைத்தார்.

இதுகுறித்து,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''வள்ளுவர் கோட்டம் கண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, திருவாரூர் மண்ணில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர்   முக.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பீகார் மாநில துணை முதலமைச்சர் சகோதரர் தேஜஸ்வி  அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.

தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக தன் வாழ்வெல்லாம் உழைத்த கலைஞரின் திருவுருவச்சிலையை கோட்டத்தின் மையத்தில் நம் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்த உணர்வுப்பூர்வமான தருணத்தில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழகத்தாருடன் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறோம்.

கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்!‘’ என்று தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்சரண் தேஜா - உபாசனா தம்பதிக்கு சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜூன் வாழ்த்து