Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்பவார்-அஜித்பவார் திடீர் சந்திப்பு: மீண்டும் துணை முதல்வரா?

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (22:22 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பதவி விலகினார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விரைவில் ஆளுநர் ஆட்சி அமைக்க சிவசேனாவை அழைப்பு விடுப்பார் என்றும் முதல்வராக உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் 1ம் தேதி பதவி ஏற்பார் என்றும் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவியேற்று இன்று ராஜினாமா செய்த அஜீத் பவார் சற்றுமுன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சரத்பவார் வீட்டில் நடந்துள்ளது. இந்த நிலையில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும்போது மீண்டும் அஜீத் பவார் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஆகிவிட்ட நிலையில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜீத் பவார் மீண்டும் இரண்டு நாட்களில் துணை முதல்வர் பதவி ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments