Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது கோவா அல்ல, மகாராஷ்டிரா! சரத்பவார் ஆவேசம்

Advertiesment
இது கோவா அல்ல, மகாராஷ்டிரா! சரத்பவார் ஆவேசம்
, திங்கள், 25 நவம்பர் 2019 (20:41 IST)
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல; மகாராஷ்டிரா என்று ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மேலும், ‘கர்நாடகா, கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தார்கள். பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு பிரச்னை இல்லை; நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 162 எம்எல்ஏக்களுக்கும் அதிகமாக அழைத்து வருவோம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் சரத்பவார் தெரிவித்தார்.
 
முன்னதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு செய்யப்பட்டனர். மொத்தமுள்ள 288 எம்.எல்.ஏக்களில் சிவசேனா, சரத்பவார், காங்கிரஸ் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றால் பாஜக, அஜித் பவார் கூட்டணியில் 126 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்நாவிஸ் அரசு நிச்சயம் கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அமித்ஷா என்ற மாயாஜாலம் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிசயம், அற்புதம் நிகழும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை விட்டுவிட்டு மாயமான பெண்: விழுப்புரத்தில் பரபரப்பு