Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பெயரில் விமான நிலையம், தசரதர் பெயரில் கல்லூரி: உபி முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (08:46 IST)
மத்தியிலும், உபி மாநிலத்திலும் பாஜக ஆட்சியை பிடித்தது முதல் ராமர் கோவில் கட்டுவது உள்பட ராமர் செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் அயோத்தி என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அயோத்தி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது அயோத்தி மாவட்டத்தில் ராமர் பெயரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், ராமரின் தந்தை தசரதர் பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரியும் துவக்கப்படும் என்றும் ஆதித்யநாத் வாக்குறுதி கூறினார்.

மாவட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி விமான நிலையம் மற்றும் மருத்துவகல்லூரிக்கும் ராமர், தசரதர் பெயர் வைக்க உபி அரசு முடிவு செய்திருப்பது சிறுபான்மை மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments