2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என முன்னாள் எம்.பி ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வாந்தால் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வெளிப்படையான கருத்துகள் தெரிவிப்பதை மோடி உள்ளிட்ட தலைவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால் பாஜகவை சேர்ந்த பலரும் அயோத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான தாங்களது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் எம்.பி ராம் விலாஸ் அயோத்தில் ராம் கோயில் கட்டுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
பாஜகவின் தீர்மானத்தின்படி அயோத்தியில் வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.