Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்கள் தேர்வு நடப்பதாக சொல்வது மோசடி! ஏமாறாதீங்க..! – இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:43 IST)
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பெயரில் ஆட்கள் தேர்வு நடப்பதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பொறியியல் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பில் மண்டல அதிகாரிகள், தாலுகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக மோசடி ஆசாமிகள் சிலர் வேலையில்லா பட்டதாரிகளை அணுகுவதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அத்தகைய தேர்வு எதுவும் நடைபெறவில்லை என்றும், மோசடி ஆசாமிகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக தங்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments