மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்ற நிலையில், கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு சிதைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிவி சண்முகம், புதுச்சேரியில் கூட்டணி அரசுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு சிதைக்கிறது என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரங்கசாமி முதல்வராக இருக்க மாட்டார், மேயராகி விடுவார் என கடுமையாக விமர்சித்தார்..