Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்செட்டில் இருந்த ரோஜா – முக்கியப் பதவி கொடுத்து சமாதானப்படுத்திய ஜெகன் மோகன் !

அப்செட்டில் இருந்த ரோஜா – முக்கியப் பதவி கொடுத்து சமாதானப்படுத்திய ஜெகன் மோகன் !
, வியாழன், 13 ஜூன் 2019 (09:55 IST)
அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அப்செட்டில் இருந்த நடிகை ரோஜாவுக்கு முக்கியமானப் பதவியை வழங்கியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் மொத்தமுள்ள் 175 சட்டப்பேரவை தொகுதியில் நடந்த தேதலில் 151 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.  முதலில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி பதவியேற்றார். அதன் பின்னர் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். ஜெகனின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்த நடிகை ரோஜாவுக்குத் துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் ரோஜா அதிருப்தியில் இருப்பதாக ஆந்திர ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதை உணர்ந்த ஜெகன் நேற்று ரோஜாவை அழைத்து ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பொறுப்பை ரோஜாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். 

ரோஜாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி அம்மாநிலத்தின் மிக முக்கிய நியமன பதவிகளில் ஒன்றாகும். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக நிலம் ஒதுக்குவதற்கான அனைத்து அதிகாரங்களும் இக்கழகத்திற்கே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொங்கு மண்டலம் இனி அதிமுக கோட்டையில்லை – ஸ்டாலின் பெருமிதம் !