Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் ஏன் தோற்றோம்:சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டம்

Advertiesment
Chandra babu Naidu
, செவ்வாய், 11 ஜூன் 2019 (13:04 IST)
ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது.  இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் தோல்வி குறித்து தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போதிய வாக்குகள் இல்லாமல் எதிர்கட்சி என்ற தகுதியையும் இழந்தது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் தோல்வியை குறித்து சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரத்தில் கட்சியை பலப்படுத்தவேண்டும் என்றும், சட்டசபை கூட்டத்தொடரின் போது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றியும் விவாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட ஸ்டைலில் மீன்களுக்கு தளபதியை உணவாக கொடுத்த கொரிய அதிபர்