Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகையிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர்.. ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
நடிகையிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர்.. ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
, வெள்ளி, 19 மே 2023 (07:53 IST)
கேரளாவை சேர்ந்த நடிகையிடம் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பை காட்டிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் நடிகரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். 
 
உடனே நடிகை தனது ஃபோனில் வீடியோ எடுத்து அந்த இளைஞனிடம் சரமாரியாக கேள்வி கேட்டார். அப்போது பேருந்தில் இருந்து அந்த இளைஞர் இறங்க முயற்சித்தார். ஆனால் பேருந்தில் இருந்த சக பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுநர் அந்த இளைஞரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 
 
காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தனக்கு உதவிய பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து அந்த நடிகை தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?