Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் 175 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அமைச்சர் ரோஜா

Advertiesment
ஆந்திராவில்  175 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அமைச்சர்  ரோஜா
, வியாழன், 18 மே 2023 (16:41 IST)
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் திருச்செந்தூர் வருகை தந்த ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா,  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

திருச்செந்தூர் கோவிலுக்கு பல ஆண்டுகள் கழித்து வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்தியாவில் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார்.  ஆந்திர மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் நலன் ஆகியவற்றை இரு கண்ணாகக் கருதி செயலாற்றி வருகிறார்.  வரும் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர்.


அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- உச்சநீதிமன்றம் உத்தரவு