பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி பெற்றுள்ள நிலையில் எளிய முறையில் பகவந்த் மான் பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை என்ற நிலையில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 18 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியுள்ளது.
அதை தொடர்ந்து பஞ்சாபில் பதவியேற்பதற்கான செயல்பாடுகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது. பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். பின்னர் மார்ச் 16 அன்று பகவந்த் மானின் சொந்த ஊரான கட்கர்கலானில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.