ஐயப்பன் கோவில் அருகே தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2ஆம் தேதி கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலர் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஐயப்பன் கோவிலுக்கு அருகிலுள்ள ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் கடும் பீதியில் ஆழ்ந்துள்ள கேரள மக்கள், கோட்பாடுகளை மீறி பெண்கள் கோவிலுக்குள் சென்றதே இந்த அசம்பாவத்திற்கு காரணம் என்றும், ஐயப்பனை கோபப்படுத்தியதால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என மக்கள் பீதியுடன் வேதனை தெரிவித்துள்ளனர்.