சிறுமியை கடத்திய வழக்கில் கைதான நபர்: ஜாமீனில் வந்து அதே சிறுமியை பாலியல் பலாத்காரம்..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:07 IST)
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை கடந்த மே மாதம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

பாண்டே என்ற அந்த நபர் மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் இயற்கை உபாதை கழிக்க வந்த அதே சிறுமியை கடத்தி ஒரு மாதமாக அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியை விட்டு சென்ற நிலையில் தற்போது பாண்டே என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாண்டே மீண்டும் அதே சிறுமியை மீண்டும் கடத்தி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்