Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார்

Advertiesment
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார்
, செவ்வாய், 2 மே 2023 (15:30 IST)
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  மே மாதம்  13 ஆம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், சினிமா நட்சத்திரங்களும்  தங்கள் கட்சிக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அதன்படி, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதா கட்சியில் இருந்த நிலையில்,  அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி சார்பில், சிவமோக்கா நகரில் நடைபெற்ற பேரணியில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்,

இன்று நடைபெற்ற பேரணியில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். இன்று அவர் பேசியதாவது: '' நான் ராகுல் காந்தியின் தீவிர ரசிகன். சமீபத்தில் அவர் மேற்கொண்ட இந்திய ஒற்றறுமை பயணம் மேற்கொண்டு நாடு முழுவதும் பாத யாத்திரை செய்தார்.  அவரத் யாத்திரையயால் நான் ஈர்க்கப்பட்டேன்''' என்று கூறியுள்ளார்.

கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் கழக ஆட்சி மலரும்- அதிமுக பொ.செ., எடப்பாடி பழனிசாமி