கடந்த பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத்பவார் திடீரென தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 19919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை தொடங்கிய முதல் சரத்பவார் தலைவர் பதவியில் இருந்து வருகிறார் என்பதும் மகாராஷ்டிராவில் ஒரு வலுவான கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அரசியல் இருந்து விகல விலகவில்லை என்றும் மக்களுக்காக பணியாற்றுவது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் எதற்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என்ற காரணத்தை அவர் சொல்லவில்லை என்பதும்
மேலும் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்பவார் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அக்ககட்சியின் முன்னணி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்