Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னையே வேணாம்னு சொல்லிட்டியா - மணப்பெண்ணை புரட்டி எடுத்த வாலிபர்(அதிர்ச்சி வீடியோ)

என்னையே வேணாம்னு சொல்லிட்டியா -  மணப்பெண்ணை புரட்டி எடுத்த வாலிபர்(அதிர்ச்சி வீடியோ)
, வியாழன், 12 ஜூலை 2018 (09:28 IST)
டெல்லியில் இளம்பெண் ஒருவர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை கடைசி நேரத்தில் வேண்டாம் என கூறியதால் மணமகன் இந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் கல்யாண வேலைகளை செய்து வந்தனர்.
 
கடைசி நேரத்தில் அந்த பெண் திடீரென திருமணம் வேண்டாம் எனக்கூறிவிட்டார். இதனால் மணமகனும் அவரது பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
 
இதனையடுத்து அந்த வாலிபர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று ஏன் திருமணத்தை நிறுத்தினாய்? என விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ அந்த வாலிபரை மதிக்காமல் சென்றுள்ளார்.
 
இதனால் கடும்  கோபமடைந்த அந்த வாலிபர், இளம்பெண்ணை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ நமக்கு எதுக்கு வம்பு என அமைதியாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
 
இந்த காட்சி அனைத்தும் கடையிலிருந்த, சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி