டெல்லியில் உள்ள பள்ளி நிர்வாகம் ஒன்று கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று குழந்தைகளை பேஸ்மெண்டில் பூட்டிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி ஹவுஸ் காசி பகுதியில் ராபியா என்ற பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகம், 55 பிளே ஸ்கூல் குழந்தைகளை கட்டணம செலுத்தவில்லை என்று கூறி கட்டிடத்தின் பேஸ்மெண்டில் பூட்டிவைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது:-
குழந்தைகள் காலை 7 மணியிலிருந்து பேஸ்மெண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக பள்ளியில் பணியாற்றுபவர் தகவல் தெரிவித்தார். பேஸ்மெண்டின் அறைக்கதவு வெளிப்பகுதியில் பூட்டப்பட்டு இருந்தது. பெரும்பாலான குழந்தைகள் பசியுடனும், தாகத்துடனும் இருந்தனர் என்றி குற்றம் சாட்டியுள்ளனர்.