Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீவிபத்து: உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:09 IST)
கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீவிபத்து:
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி புதிய உச்சத்தையும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அளவாகவும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது 
 
கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரனோ நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனையில் இடமில்லாததால் கொரோனா நோயாளிகள் சிலர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா என்ற நகரில் கொரோனா நோயாளிகள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் அந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது 
 
இந்த தீவிபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கோரானோ நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments