ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் என்பது விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்க வில்லை என்பதும் பஞ்சாபில் வைத்திருந்த ஆட்சியையும் அந்த கட்சி இழக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது