பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கால அவகாசம் முடிந்தும் பிரச்சாரம் செய்ததாக அம்மாநில முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி என பலமுறை போட்டி நடைபெறுவதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
நாளை வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து விதமான தேர்தல் பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரச்சார நேரம் முடிந்த பின்னரும் காங்கிரஸ் வேட்பாளர் சித்து மூஸ் வாலா என்பவரை ஆதரித்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிகளை மீறியதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.