Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 ஆயிரம் பெண்களை கடத்தி ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி

Advertiesment
4 ஆயிரம் பெண்களை கடத்தி ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி
, திங்கள், 6 மார்ச் 2017 (17:06 IST)
டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதியினர் மீது 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 

 
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு வங்கதேசம் வழியாக பெண்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
மனித கடத்தலில் டெல்லியைச் சேர்ந்த அபக்உசேன், சாய்ரா என்ற தம்பதியினர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெண்களை கடத்தி, பாலியல் தொழில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் பெரிய அளவில் தொழிலாக செய்து வந்தது தெரியவந்தது.
 
பாலியல் தொழில் செய்து வந்த சாய்ராவை அபக்உசேன் திருமணம் செய்துக்கொண்டார். பின் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுப்பட்டனர். பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுப்பட வைத்தனர். அதன் மூலம் அவர்களுக்கு பணம் அதிகளவில் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏஜெண்டுகள் மூலம் பெரிய அளவில் இதை தொழிலாக செய்து வந்துள்ளனர்.
 
தற்போது இவர்களுடன் சிறையில் மேலும் 10 பேர் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ளே இருக்கின்றனர். இந்த தம்பதியினர் மீது 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் ஜெ. - சந்திக்க விரும்பிய மோடியை தடுத்தது யார்?