Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவமனையில் ஜெ. - சந்திக்க விரும்பிய மோடியை தடுத்தது யார்?

மருத்துவமனையில் ஜெ. - சந்திக்க விரும்பிய மோடியை தடுத்தது யார்?
, திங்கள், 6 மார்ச் 2017 (16:56 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க முயன்ற பிரதமர் மோடியை சிலர் தடுத்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.  
 
மேலும், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர், அப்பல்லோ சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். டெல்லியிலிருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோ வந்தார். ஆனால், ஜெ.விற்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரதமர் மோடி நேரில் வந்து ஜெ.வை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவில்லை.  இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை கிளப்பியது. அந்நிலையில் ஜெ. கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் இறுதி சடங்கில் மோடி கலந்து கொண்டார்.
 
இந்நிலையில்,  ஜெ.வின் மரணம் குறித்து பிரதமர் மோடிக்கும் சந்தேகம் இருப்பதாகவும், ஜெ.வின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள, அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்ல அவர் இரண்டு முறை விரும்பியதாகவும், ஆனால், அவரை சிலர் தடுத்தனர் எனவும் கூறப்படுகிறது. மேலும், சசிகலாவின் குடும்பம் அதிமுகவை கைப்பற்றுவதில் அவருக்கும் விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்த பின், அவரின் கவனம் தமிழக அரசியலின் மீது திரும்பும் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோவில் ஜெ ; எய்ம்ஸ் மருத்துவர்கள் அடித்த கமெண்ட் : பகீர் தகவல்