Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் மாதம் 21 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (12:22 IST)
அக்டோபர் மாதம் துவங்க இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

 
அத்னபடி அக்டோபர் மாதத்தில் 21  நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாம் சனி, நான்காம் சனி என 7 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் மேலும் உள்ள விடுமுறை பட்டியல் பின்வருமாறு... 
 
விடுமுறை நாட்கள் விவரம்:
அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 6 – மஹாளய அமாவாசை (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தாவில் விடுமுறை)
அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி (திரிபுரா, மேற்கு வங்கம், இம்பால் பகுதியில் வங்கிகள் விடுமுறை)
அக்டோபர் 12 – துர்கா பூஜை (அகர்தலா, கொல்கத்தாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
அக்டோபர் 13 – துர்கா பூஜை, (அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி பகுதிகளில் விடுமுறை)
அக்டோபர் 14 – தசரா, மகா நவமி (அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் வங்கிகள் விடுமுறை)
அக்டோபர் 15 – விஜய தசமி (இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்களில் விடுமுறை)
அக்டோபர் 16 – துர்கா பூஜை (சிக்கிம்-கேங்டாக் பகுதியில் விடுமுறை)
அக்டோபர் 18 – கதி பிஹு (அசாமில் விடுமுறை)
அக்டோபர் 19 – மிலாடி நபி
அக்டோபர் 20 – வால்மீகி பிறந்த நாள் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா பகுதிகளில் விடுமுறை)
அக்டோபர் 22 – மிலாடி நபி (ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் விடுமுறை)
அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு, ஸ்ரீநகரில் விடுமுறை)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments